நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!...
ஈசன்தான் தன்முன் நின்று வாதிடுகிறார் என்பதை அறிந்தும் நக்கீரர், "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!..." என்று கூறியதன் மூலம் அவரின் தமிழ்ப்பற்றையும், மெய் கூறும் தன்மையையும், புலமையையும் உலகறியும். மேலும் ஈசன் செய்யுளில் பிழை உள்ளதைக் குறித்து வாதிடும்போது,
"அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரரோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்" என்பார்.
அதற்கு நக்கீரர்,
"சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம் சங்கை அரிந்துண்டு வாழ்வோம்
அரனே, உன் போல் இரந்துண்டு வாழ்வதில்லை!.." என்பார். சங்கறுப்பது எங்கள் குலம் (சங்கினை அறுத்து வளையல்கள் செய்து வாழும் குலத்தைச் சேர்ந்தவர்கள் ), சங்கரனே உனக்கு ஏது குலம்?. சங்கினை அறுத்து உயிர் வாழ்வோமே தவிர உன் போல் அச்சங்கினைக் கொண்டு இரந்துண்டு(பிட்சையெடுத்து) வாழமாட்டோம் என்பதே அதன் பொருள். செய்யுளில் உள்ள பிழைக்காக இறைவனையும் எதிர்த்து வாதிட்டு வென்ற சாதனை நக்கீரரையே சாரும்.
தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதும் திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு முதலிய பல்வேறு நூல்கள் தமிழில் இயற்றப்பட்டு உலகிற்கே வாழ்க்கையின் நெறிமுறைகளை பறைசாற்றிக் கொண்டிருகின்றது என்பதும் அறிந்ததே. நம் முன்னோர்கள் காட்டிய மொழிப்பற்று ஏன் நம்மிடம் குறைந்து வருகின்றது?.
ஆங்கில மோகத்தில் நாம் தமிழை அடமானம் வைத்து விட்டோமா!.. ஜப்பான், சீனா போன்ற நாடுகள் கல்வி, அலுவலக பயன்பாடு முதல் அனைத்திற்கும் அவர்கள் தாய்மொழியிலேயே பயில்வதை நாம் கேள்விப்படுகிறோம். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை காக்கிறார்கள், நாம் என்ன செய்கிறோம்?
நம் பாரதி தமிழ் இனி மெல்ல சாகும் என்றதின் அர்த்தம் இதுதானா!. பிற்காலத்தில் இதுதான் தமிழ் என கல்வெட்டையும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற வாசகங்களையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோமோ!...
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் நம் முன்னோர்கள் என்றால், அதன் புலமை இங்கு யார் கண்ணுக்கு தென்பட்டது. பணவளமை தான் கண்முன் நிற்கிறது ஆங்கிலமாய். தனி மனிதனை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது, அவ்வாறு வாழும் நிலைக்கு அவன் தள்ளப் பட்டிருக்கிறான் .
திரு சகாயம் மாவட்ட ஆட்சியர் சொன்னதுபோல தமிழை அரசுப்பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவர்கள் தான் வளர்க்கிறார்கள் என்பது உண்மைதான். மேலும் தமிழ் அந்தந்த காலகட்டங்களுக் கேற்ப மொழியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு திரிந்து இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எவ்வாறாயினும் தமிழுக்கு இணையாக எம்மொழியும் தனித்து இயங்க முடியாது என்பதே உண்மை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
நம் பாரதி தமிழ் இனி மெல்ல சாகும் என்று சொல்லவில்லை...
ReplyDeletehttps://goo.gl/pGrj3f
இந்த Linkல் சென்று முழூ விபரமும் தெரிந்து கொள்க...
பிழை திரித்திட வேண்டுகிறேன்.
நன்றி சகா...!!